» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை !

புதன் 15, ஜூலை 2020 12:08:37 PM (IST)

பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது வேலை வாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச இளைஞர் திறன் தினத்தில், அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கரோனா பேரிடர் காலத்தில் நமது வேலை வாய்ப்புகளும், அதனை செய்யும் முறையும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், புதிய தொழில்நுட்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள் புதிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

திறன் என்பது நமக்கு நாமே அளிக்கும் ஒரு பரிசு. அது அனுபவத்தின் மூலம்தான் வளர்கிறது. திறனுக்கு எந்த காலமும் கிடையாது, காலம் செல்ல செல்ல திறன் வளர்ந்து கொண்டே இருக்கும். திறன் என்பது தனித்துவம் மிக்கது, அது பிறரிடம் இருந்து உங்களை தனித்துக் காட்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது வேலை வாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், சிலர் எப்போதுமே அறிவையும் திறனையும்  குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் அது குறித்து விளக்குகிறேன், அதாவது, சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று புத்தகம் மூலம் படிப்பதும், இணையதளத்தில் பார்ப்பதும் அறிவை வளர்க்கும். ஆனால், ஆனால் இதை எல்லாம் செய்வதால் நீங்கள் சைக்கிளை ஓட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது, உண்மையிலேயே நீங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு உங்களுக்கு திறன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory