» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆகஸ்ட் 1 ம் தேதி அரசு பங்களாவை காலி செய்கிறார் பிரியங்கா காந்தி

செவ்வாய் 14, ஜூலை 2020 11:51:01 AM (IST)

ஆகஸ்ட் 1-ம் தேதி அரசு பங்களாவை காலி செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

புது டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தங்கியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், பங்களாவை காலி செய்ய கூடுதல் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்திருக்கும் பிரியங்கா, நான் அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி பங்களாவை காலி செய்கிறேன் என்று சுட்டுரை மூலம் பதிலளித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory