» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு : நடுரோட்டில் மறித்து தகராறு செய்த மனைவி

செவ்வாய் 14, ஜூலை 2020 11:42:30 AM (IST)மும்பையில் தனது கணவனுடன் காருக்குள் வேறொரு பெண் இருப்பதை பார்த்த பெண் ஒருவர் கணவனின் காரை ரோட்டில் வழிமறித்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தனது கணவனின்  காரை மற்றொரு காரில் துரத்திவந்த அவரது மனைவி, காரை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு தனது கணவனின் காரை நிறுத்தி காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், அந்த பெண்ணுடன் தனது கணவர் தவறான உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கார் கண்ணாடியை உடைக்க முற்பட்ட அந்த பெண் தனது கணவனையும், அந்த பெண்ணையும் காரைவிட்டு இறங்குமாறு கூறுகிறார், பின்னர் காரின் முன்புறத்தில் ஏறி தனது செருப்பை கழட்டி கார் கண்ணடி வழியாக அந்த பெண்ணை அடிக்கிறார். இதனிடையே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட, அங்கு வந்த போலீசார் கணவன் மனைவி சண்டை ஒருபுறம் நடக்க, மறுபுறம் போக்குவரத்தை சரி செய்கின்றனர்.

பின்னர் அந்த பெண்ணின் கணவர் காரை அங்கிருந்து ஓட்டிச்செல்கிறார், இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்ததாகவும், ஆனால் வழக்கு ஏதும் தொடரவில்லை எனவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory