» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணம் அடைவோர் விகிதம் 62.93 % : மத்திய அரசு

திங்கள் 13, ஜூலை 2020 12:45:12 PM (IST)

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 62.93% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் சார்பாக கூறும் பாேது, கோவிட்- 19 நோய்க்கு எதிராக ஒட்டுமொத்த முழுமையான அரசு அணுகுமுறையுடன், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்; நோயை முன்கூட்டியே அடையாளங்கண்டு, உரிய காலத்தில் நோயைக் கண்டறிந்தற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறம்பட மருத்துவ சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் காரணமாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 19235 பேர் குணமடைந்தனர். இதையடுத்து இதுவரை 5,34,620 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

குணமடைவோர் சதவிகிதம் 62.93% ஆக அதிகரித்துள்ளது. அனைத்து வகையிலான முயற்சிகளின் காரணமாக, தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட 2,42,362 பேர் நோயிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேருக்கு கோவிட் 19 நோய் பாதிப்பு உள்ளது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது நாட்டில் 850 அரசு பரிசோதனை ஆய்வுக்கூடங்களும், 344 தனியார் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. 

மொத்தம் 1194 ஆய்வுக்கூடங்கள்.ரியல் டைம் ஆர்டிபிசிஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 624 (அரசு 388+ தனியார் 236 )ட்ரூநாட்அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 472 (அரசு 427தனியார் 45) என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory