» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பு மருந்து 2021ம் ஆண்டிற்கு முன் வர வாய்ப்பே இல்லை: மத்திய அரசு அறிவிப்பு!

சனி 11, ஜூலை 2020 5:26:08 PM (IST)

இந்தியாவில் கரோனா மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன் வருவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் உலகையே நிலைகுலைய வைத்துள்ள நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மக்கள் செயல்பாட்டுக்கு வர ஒரு ஆண்டுக்கு மேலாகும் என சொல்லப்படுகிறது.

இந்தியா covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள்ளாகவே ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த 11 மருந்துகளில் எதுவும் 2021 ஆம் ஆண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு வராது’ எனக் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory