» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா வைரஸ் பரவலால் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு

சனி 11, ஜூலை 2020 3:40:47 PM (IST)

கரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லி அரசுக்கு உட்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை. ஆதலால், டெல்லி அரசுக்கு உட்பட்ட பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள், இறுதியாண்டுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் கீழ் வரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் முந்தைய தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கி அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதே முறைதான் இறுதியாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பொருந்தும். எதிர்பாராத சூழலில் எதிர்பாராத முடிவுகளைத்தான் எடுக்க வேண்டும்.

பள்ளிகளைப் பொறுத்தவரை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படாது. அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி கணக்கில் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைப் பின்பற்றியே டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. அதன்படியே இறுதியாக நடந்தது.

இப்போது பள்ளிக்கூடப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, பல்கலைக்கழகத் தேர்வுகள் வந்துள்ளன. இந்த செமஸ்டர் முழுவதும் எந்தவிதமான களப்பணி, செய்முறைத் தேர்வு, ஆய்வகச் சோதனை நடத்தப்படாது. டெல்லியைச் சேர்ந்த இறுதியாண்டு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்காகக் காத்திருக்காமல் வேலை கிடைத்திருந்தால் அல்லது வேலைவாய்பபு கிடைத்திருந்தால் அதைப் பயன்படுத்தி, பணியைத் தொடரலாம்’’. இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory