» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை : ஸ்வப்னா சுரேஷ்

வியாழன் 9, ஜூலை 2020 6:31:23 PM (IST)

கேரளா மாநிலத்தில் நடந்த தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆடியோ மெசேஜ் மூலம் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ் இது குறித்து அனுப்பியிருக்கும் வாய்ஸ் மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதில், தூதரகத்துக்கு வந்த பெட்டகம் இன்னும் ஏன் அனுப்பப்படவில்லை என்று நான் சுங்கத் துறையை தொடர்பு கொண்டு கேட்டேன். அது மட்டும்தான் நான் செய்தது. ஆனால், அந்த பெட்டகம் எங்கிருந்து வந்தது என்பதோ, அதில் என்ன இருக்கிறது என்பதோ எனக்கு தெரியாது. தற்போது உருவாகியிருக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்ட அச்சத்தால்தான் நான் தலைமறைவாக உள்ளேன். நான் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன், ஆனால், இந்த தங்கக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மிக வருத்தத்துடன் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ளஅதன் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனா். இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஸ்வப்னா சுரேஷுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஞாயிற்றுக்கிழமை 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது முதல் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகவே உள்ளார். அவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்வப்னாவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்பு பணியாற்றியவர்.இந்த குற்றச் சம்பவத்தில் மாநில முதல்வரின் அலுலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், முதல்வா் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory