» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தங்கம் கடத்தல் விவகாரம் : கேரள அரசின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம்

செவ்வாய் 7, ஜூலை 2020 3:41:10 PM (IST)

கேரளத்தில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் கேரள ஐடி பிரிவு அதிகாரி ஸ்வப்னா என்பவர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல்வரின் முதன்மைச் செயலாளராக மிர் முகம்மது அலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்த விவகாரத்தில் ஐடி பிரிவு ஆலோசகர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து பினராயி விஜயன், கடத்தல் சம்பவத்தை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். அதேநேரத்தில் சுங்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory