» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் : கேரள ஐ.டி. பிரிவு பெண் அதிகாரி கைது

செவ்வாய் 7, ஜூலை 2020 3:36:02 PM (IST)

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் இருந்து கடத்தல் தங்கத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சிக்கிய தங்கத்தின் மதிப்பு சுமார் 30 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது.  சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக அந்தப் பெட்டகமானது, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, திருவனந்தபுர விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது. அதிகாரிகளால் விடுவிக்கப்படுவதற்காக சரக்கு முனையத்தில் காத்திருப்பில் இருந்துள்ளது.

விசாரணையில் அந்தப் பெட்டகமானது துபாயில் இருந்து வந்துள்ளது என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு அனுப்பட்டுள்ளது என்பதும் சுங்க அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறையின் அனுமதியோடு அந்த பெட்டகத்தை பிரித்துப் பார்த்த சுங்கத் துறை அதிகாரிகள், அதில் 30 கிலோ தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், அந்த பெட்டகத்தை பெற்றுக் கொள்ள வந்த ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போதுதான், அவர் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸரித் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பிறகும், அவர் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததும், தூதரகத்தின் பெயரில் ஏராளமான தங்கத்தை கேரளத்துக்குள் கடத்தி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சுவப்னாவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியவர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறிய பிறகும் கூட, இந்த கடத்தலுக்கு உதவியுள்ளார். இந்த கடத்தலில் அவரது தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு வரும் உடைமைகளுடன், இதுபோன்ற கடத்தல் தங்கத்தையும், தூதரகத்தின் பெயரில் அனுப்பி முறைகேடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுவப்னா வகித்து வந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஒப்பந்தப் பணியாளர் மட்டுமே என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory