» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது

திங்கள் 6, ஜூலை 2020 8:57:56 AM (IST)

குஜராத்தில் பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷா. இதில் பணியாற்றி வந்த 2 பெண்கள் கேனல் ஷா தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  மகளிர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் சுவேதா ஜடேஜா அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யவில்லை மேலும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத சுவேதா, சாதாரண வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை சுவேதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, சுவேதாவை கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ivanJul 6, 2020 - 05:03:57 PM | Posted IP 162.1*****

சில குஜராதிகாரர்கள் எல்லாம் பிராடு பித்தலாட்டக்காரர்கள்

M.sundaramJul 6, 2020 - 12:05:22 PM | Posted IP 108.1*****

(LadiS) HUM HISISE COM NAHI HAI. It says We are equal to gents in corruptions also.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory