» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஞாயிறு 5, ஜூலை 2020 6:10:05 PM (IST)

இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று காணொலி காட்சியில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, எலிமெண்ட்ஸ் ஆப் என்ற செயலியை வாழும் கலை அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யோகா குரு பாபா ராம்தேவ், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த செயலி பண பரிமாற்றம், வீடியோ, ஆடியோ அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பயன்படும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory