» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீர்கள்: லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு!!

வெள்ளி 3, ஜூலை 2020 4:13:30 PM (IST)



இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது என ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு செய்தார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார். 

பின்னர் நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது. நீங்கள் நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி உள்ளீர்கள். உங்கள் கோபத்தை எதிரிகள் பார்த்திருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தைரியத்தைக் கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டி உள்ளது. எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வலிமை மீது இந்த நாடே நம்பிக்கை கொண்டுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.  நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்திய நாட்டைக் காக்க உயிரிழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பயணம், சீனாவுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி உள்ளனர்.


மக்கள் கருத்து

MakkalJul 3, 2020 - 09:09:22 PM | Posted IP 108.1*****

கெத்து காட்டும்.மோடிஜி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory