» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்

வெள்ளி 3, ஜூலை 2020 10:24:33 AM (IST)

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார். அவரது மறைவுக்கு திரையிலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் (71) காலமானார். சரோஜ் கான், பாலிவுட் பட உலகில் மறக்க முடியாத பல பாடல்களுக்கு நடன  இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  தமிழிலில்  இருவர், தாய் வீடு உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

"ஏக் தோ தீன்", "தாக் தாக்", "ஹவா ஹவா", "தம்மா தம்மா" போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார்.

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சுவாசக் குறைபாடு பிரச்சினையால் கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையிலும் கரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இதனால் சுவாசக் கோளாறுக்கான சிகிச்சை மட்டும் சரோஜ் கானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார் என்று மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளனர். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory