» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய் 30, ஜூன் 2020 4:32:05 PM (IST)

கரோனா பரவல் காரணமாக வரும் நவம்பர்  மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி புது டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

ரேஷனில் ஏழை, எளிய மக்களுக்கு கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். அதனுடன் ஒரு கிலோ கடலை பருப்பும் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் சுமார்  80 கோடி மக்களை நமது இலவச ரேஷன் பொருள்கள் சென்றடையும். இந்த திட்டத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

கடந்த 3 மாதத்தில் பொதுமக்களுக்கு ரூ.31 ஆயிரம் கோடி நேரடி பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  முகக் கவசம் அணியாமல் இருந்ததால் ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிரதமர் முதல் சாமானியர்கள் வரை விதிமுறைகள் ஒன்றுதான் என்றும் மோடி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory