» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2020 ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் : பிரதமர் மோடி பேச்சு

ஞாயிறு 28, ஜூன் 2020 12:58:21 PM (IST)

எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கரோனா வைரஸ் பரவல் நேரத்தில் முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம் உள்ளளது.  கரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது, இந்த நேரத்தில் மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது

இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன, ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்கள் - ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிறது.தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர்

கரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள். இவ்வாறு மோடி பேசினார். 


மக்கள் கருத்து

23 ஆம் புலிகேசிJun 30, 2020 - 10:21:37 PM | Posted IP 106.1*****

என்ன 2021 ல இத விட ஏதாவது பெருசா வச்சிருக்கீங்க லா ஜீ

rajaJun 29, 2020 - 11:02:25 AM | Posted IP 162.1*****

ama 2021 inum mosma irukum engalala athaane...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory