» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

சனி 27, ஜூன் 2020 11:41:49 AM (IST)

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கபட்டது.

இந்த அவசர சட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory