» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 58.24 சதவீதமாக அதிகரிப்பு

வெள்ளி 26, ஜூன் 2020 6:59:00 PM (IST)

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கோவிட் 19 எனப்படும் கரோனா பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,940 கொவைட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது.

தற்போது 1,89,463 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டெ வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,446 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 77,76,228 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

RAJUJun 27, 2020 - 12:28:14 PM | Posted IP 162.1*****

police endral unkaluku avlav elakkarama poittu

RAJUJun 27, 2020 - 12:27:38 PM | Posted IP 162.1*****

ukkalukku ellam kevalama thariyalaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory