» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நான் இந்திரா காந்தியின் பேத்தி, என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்: பிரியங்கா ஆவேசம்!

வெள்ளி 26, ஜூன் 2020 4:09:27 PM (IST)

"நான் உண்மையை முன்வைத்துக் கொண்டுதான் இருப்பேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி" என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கான்பூர் அரசு சிறுமிகள் இல்லத்தில் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முகநூலில் பிரியங்கா தெரிவித்துள்ள கருத்துக்குத்  திருத்தம் வெளியிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உ.பி. அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. 

மக்கள் ஊழியர் என்ற வகையில் உத்தரப் பிரதேச மக்களின் முன் உண்மையை வைக்கிறேன். இதுவொன்றும் அரசு பிரச்சாரமல்ல. என்னை அச்சுறுத்துவதன் மூலம் நேரத்தை உ.பி. அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது  என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா.

சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல தாம் ஒன்றும் அறிவிக்கப்படாத பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா, தாம் தொடர்ந்து உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார். "சொல்லப் போனால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைச் செய்யுங்கள். நான் உண்மையை முன்வைத்துக் கொண்டுதான் இருப்பேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி" என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory