» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து

வெள்ளி 26, ஜூன் 2020 11:47:33 AM (IST)

இந்தியா முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

நாடு தழுவிய கரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ந் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன

ரயில் இயக்கம் ரத்து தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்கள், புறநகா் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயணிகள் ரயில் சேவைகள் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இதையொட்டி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. பயண கட்டணம் முழுவதும் திரும்ப அளிக்கப்படும். எனினும் ராஜ்தானி ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் மே 12-ஆம் தேதி முதல் 12 நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள், ஜூன் 1-ஆம் தேதி முதல் 100 நகரங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory