» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீனா சந்தி: பெயரை மாற்றும்படி கேரள அரசை வலியுறுத்தும் கிராம மக்கள்

வெள்ளி 26, ஜூன் 2020 11:37:51 AM (IST)

கேரளாவின் பதானம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொன்னி கிராமபஞ்சாயத்து மக்கள் தங்கள் ஊரில் உள்ள பிரபல சீனா முக்கு (சீனா சந்தி) என்ற இடத்தின் பேரை மாற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். 

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீனா முக்கு என்ற பெயரை கிராம மக்கள் விரும்பவில்லை. "சீனா உருவாக்கிய போர் பதற்றம் மற்றும் இந்திய வீரர்களின் தியாகம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த பெயர் மாற்றப்பட வேண்டும்" என்று பஞ்சாயத்து குழுவின் துணைத் தலைவர் பிரவீன் பிளாவிலயில் மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

"கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பிறகு, இங்குள்ளவர்கள் அந்தப் பெயரைச் சொல்வதற்கு விரும்பவில்லை. பலர் அதை மாற்ற விரும்புகிறார்கள், ”என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவை விட இந்த இடத்தின் பெயர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் அதிகம் தொடர்புடையது என்று உள்ளூர் கதை கூறுகிறது . 

கடந்த 23 ஆண்டுகளாக கொன்னி தொகுதியின் பிரதிநிதியாக உள்ள காங்கிரஸ் எம்.பி அடூர் பிரகாஷ், இது குறித்து கூறுகையில் : கடந்த 1952 இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு திறந்த ஜீப்பில் அந்தப் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஆனால் அவரது ஜீப் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்தபோது, எல்லா இடங்களிலும் சிவப்புக் கொடிகளை மட்டுமே பார்த்தார். அது ஒரு கம்யூனிச ஆதிக்கம் நிறைந்த பகுதி.

அதை பார்த்த நேரு தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம் அது  சீனா ஜங்ஷனா ? என்று கேட்டார். அப்போதிருந்து, அந்த பகுதி சீனா முக்கு என்று அழைக்கப்படுகிறது என்று அடூர் பிரகாஷ் கூறினார். பேரை மாற்ற வேண்டும் என கிராம பஞ்சாயத்து தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இறுதி முடிவு எடுக்க வேண்டியது மாநில அரசுதான். கொன்னி கிராமபஞ்சாயத்தில் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் கூட்டணி பெரும்பான்மை வகிக்கிறது. 18 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாயத்து குழுவில் 13 யுடிஎஃப் உறுப்பினர்கள் உள்ளனர். மீதமுள்ள ஐந்து பேர் இடதுசாரி ஜனநாயக கட்சியான எல்.டி.எஃப் -ஐ சேர்ந்தவர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory