» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

வியாழன் 25, ஜூன் 2020 5:50:42 PM (IST)

உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தது. அதேபோல், 9வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். விரைவில் இதற்கான மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது விடுதலைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory