» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரை நிர்வாண உடலில் குழந்தைகளை ஒவியம் வரைய வைத்த ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ வழக்கு!!

வியாழன் 25, ஜூன் 2020 4:39:03 PM (IST)தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்ட ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகி,பெண்ணியவாதி போன்ற பல்வேறு பெயர்களைப் பெற்றவர். கொச்சினில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், சபரிமலை சர்ச்சை காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாதம் இவருக்கு கட்டாய ஓய்வு அளித்து நீக்கியதும் நினைவுகூரத்தக்கது இந்த சூழலில் மற்றொரு சர்ச்சையில் ரெஹானா பாத்திமா சிக்கியுள்ளார். 

தனது மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, உடலும் மற்றும் அரசியல் என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். மேலும், அந்த வீடியோ மற்றும்புகைப்படத்தை முகநூலிலும் பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல்குறித்த கருத்துக்களையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட வீடியோவும் கேரள மாநிலத்தில் வைரலானது. அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியது. தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் பாலியல் சீண்டல்கள் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்து, பத்திணம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவை காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச்சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான தகவல் மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கும் தகவல் சென்றது. இதையடுத்து, ரெஹானா பாத்திமா குழந்தைகள் வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் முழுமையான அறிக்கையை 10 நாட்களில் தாக்கல் செய்யக்கோரி பத்திணம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மேலும், தனது குழந்தைகளை வைத்து, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதை வீடியோவா வெளியிட்டதால், குழந்தைகள் பாலியல்வன்முறை தடுப்புச்சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் ரெஹானா பாத்திமா மீது திருவல்லா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருவல்லா போலீஸார் ஆய்வாளர் கூறுகையில் "ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டம், தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். எதற்காக இந்த வீடியோவை பாத்திமா எடுத்தார், ஏன் பதிவேற்றம் செய்தார், உள்நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory