» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீடிப்பு: முதலமைச்சர் மம்தா அறிவிப்பு

வியாழன் 25, ஜூன் 2020 4:19:24 PM (IST)

கரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் 591 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் கரோனா நிலவரம் பற்றி அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மம்தா ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா,  மேற்கு வங்கத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.ஏற்கனவே அமலில் உள்ள நிபந்தனைகள் தொடரும். அரசாங்க அலுவலகம் 70 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். அனைத்து கல்வி நிலையங்களும் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து இயங்காது என்றும் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory