» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க முடிவு - இஸ்ரோ தலைவர் வரவேற்பு

வியாழன் 25, ஜூன் 2020 12:27:12 PM (IST)

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் சில துறைகளில் தனியார் பங்களிப்பு முக்கியம் என்றும் அதற்கு ஒப்புதல் அளித்தும் மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை நேற்று முடிவு எடுத்தது. இதில் விண்வெளித்துறையிலும் தனியார் பங்களிப்பை அனுமதித்து மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார். மேலும் அவர் கூறிம் போது விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி, ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் - ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது விண்வெளி முயற்சிகளில் தனியார் துறையை கையாளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய  நிறுவனமாக செயல்படும், இதற்காக இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory