» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை

புதன் 24, ஜூன் 2020 5:26:23 PM (IST)

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அதனால் தேர்வுகளை ரத்து செய்யுமாறும் ஹரியாணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. 

மேலும், முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும், இதனால் மதிப்பெண்கள் குறைவாகப் பெறும் சூழ்நிலையில் அந்தந்த மாணவர்கள் விரும்பும்பட்சத்தில் பொது முடக்கத்துக்குபின்னர் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் குழு கூறியுள்ளது.முன்னதாக, பல்கலைக்கழகங்களில் ஜூலை மாதத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory