» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர முடிவு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

புதன் 24, ஜூன் 2020 5:05:55 PM (IST)

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 1,500 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சுமார் 8.6 கோடி முதலீட்டாளர்களின் 4.84 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார். இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு உடனடியாக இது அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள குஷினகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory