» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி

புதன் 24, ஜூன் 2020 3:40:12 PM (IST)

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.  பொது முடக்க காலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. நாட்டில் கரோனா பாதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை இரண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஒரு வரைபடம் மூலமாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory