» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை: விண்ணப்ப கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்

செவ்வாய் 23, ஜூன் 2020 3:40:59 PM (IST)

இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது; இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.  கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்.  2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications



Black Forest Cakes




Thoothukudi Business Directory