» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீன நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மகாராஷ்டிர அரசு

திங்கள் 22, ஜூன் 2020 5:51:20 PM (IST)

எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியதாவது: மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதில் சிங்கப்பூர், தென்கொரியா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்கள் அடங்கும். மற்ற ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory