» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது

புதன் 3, ஜூன் 2020 6:27:31 PM (IST)

அரபிக்கடலில் உருவான நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

அலிபாக் பகுதிக்கு உட்பட்ட உம்தே கிராமத்தில் புயல் காரணமாக மின் கம்பம் விழுந்ததில் 58 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாநிலத்தில் வேறு எங்கும் உயிரிழப்பு நேரிட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார்.நிசர்கா புயலின் கண் போன்ற பகுதி மட்டும் சுமார் 60 கி.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. இது ராய்காட் மாவட்டத்தைக் கடந்து உரன் பகுதியை நோக்கிப் பயணித்தது.

ராய்காட் மாவட்டத்தில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நிசர்கா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory