» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் 1½ கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை : மத்திய அரசு முடிவு

புதன் 3, ஜூன் 2020 4:46:39 PM (IST)

பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் யூனியன்களை சேர்ந்த 1½ கோடி பால் விவசாயிகளுக்கு மத்திய அரசு அடுத்த இரண்டு மாதங்களில் (ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை) விவசாயக் கடன் அட்டைகளை வழங்கவுள்ளது.

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மத்திய நிதி சேவைகள் துறை ஒன்றிணைந்து அனைத்து மாநில பால் கூட்டமைப்பு மற்றும் யூனியன்களிடம் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக விவசாயக் கடன் அட்டை இல்லாத 1½ கோடி பால் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும்.

கிசான் கிரெடிட் கார்டு எனப்படும் விவசாயக் கடன் அட்டைகள் மூலமாக, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வரையில் கடன் வழங்கப்படுகிறது. விவசாயக் கடன் அட்டைகள் மூலமாக உத்தரவாதமில்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகளுக்கான செயல்முறைக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதோடு, இதன் மூலம் பெறப்படும் கடனுக்கு மூன்று மாதங்களுக்கு வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு இச்சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 15ம் தேதியன்று விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் 2½ கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். இதன் மூலம் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ரூ.5 லட்சம் கோடி அளவிலான பணப்புழக்கத்தை கூடுதலாக ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory