» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் + மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதன் 3, ஜூன் 2020 4:31:10 PM (IST)

ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்: "கடந்த 2007ல் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியாவில், அதிகளவு வெளிநாடு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன் மூலம், சிதம்பரம் மகன் கார்த்திக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டனில், சிதம்பரமும், கார்த்தியும் சொத்துகளை வாங்கியுள்ளனர். என தெரிவித்துள்ளது. 

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வைத்து இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்பட்டிருந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அக்டோபர் 16ல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 

3 மாதங்களுக்கு மேல் டில்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு கடந்த 2019 டிசம்பர் மாதம் தான் ஜாமீன் கிடைத்தது. ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், கடந்த 2017 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., மீடயாவுக்கு கடந்த 2007 ம் ஆண்டு வெளிநாட்டு நிதி கிடைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து சிதம்பரம், கார்த்தி, மற்றும் சிலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes




Thoothukudi Business Directory