» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ஷாருக்கான் உதவி

புதன் 3, ஜூன் 2020 12:14:57 PM (IST)

ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு நடிகர் ஷாருக்கான் உதவிசெய்ய முன் வந்துள்ளார்.

பிஹார் - முசாபர்பூர் ரயில் நிலைய நடைமேடையில் தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப முயன்ற குழந்தையின் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனுதாப அலையை உருவாக்கியது.ஒரு துணியால் உடல் மூடப்பட்டிருந்த நிலையில் அவரது ஒன்றரை வயது மகன், தனது தாய் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துணியைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் சொல்லும் காட்சியின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. குழந்தையின் அந்தச் செயல் பார்த்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.பசி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று கூறப்படும் நிலையில், முசாபர்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மூன்று நாட்களாக அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தற்போது நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் மீர் தொண்டு நிறுவனம், குழந்தை குறித்து ட்விட்டரில் கூறியதாவது: இந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி. நாங்கள் இந்தக் குழந்தைக்குத் தற்போது ஆதரவளிக்கிறோம். அந்தக் குழந்தை தனது தாத்தாவின் அரவணைப்பில் உள்ளது என்று கூறியுள்ளது. ஷாருக்கான் கூறியதாவது: தனது தாயை இழந்த அந்தக் குழந்தை மனவலிமையைப் பெறவேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம். தாயை இழந்த உணர்வு எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்தக் குழந்தைக்கு நம் அன்பைத் தெரிவிப்போம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory