» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளி 22, மே 2020 3:47:39 PM (IST)வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப சில நிபந்தனைகளுக்கான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் என்றும் ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகள்: 

வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(18 வயதுக்குக் கீழ்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி. 

கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் இருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி. 

இந்தியர்களுக்குப் பிறந்து, வெளிநாட்டில் பயிலும் மாணவர்களும் (18 வயதுக்கு மேல்) இந்தியாவுக்கு வரலாம், அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து

அருண்மே 23, 2020 - 03:32:33 PM | Posted IP 117.2*****

அவனுகளால தான் கொரோனாவே இந்தியா வந்துச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory