» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மின் மிளக்குகளை அணைக்க வேண்டும் : பிரதமர் மோடி

வெள்ளி 3, ஏப்ரல் 2020 11:07:51 AM (IST)

கரோனாவுக்கு எதிராக ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்  மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்து வைக்க வேண்டும், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 2545 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 209 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது . இதையடுத்து பிரதமர் மோடி இன்றும் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார்,அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள்- பொதுமக்கள் இணைந்து கரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.

ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.மக்கள் அனைவரும் இணைந்து கரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இதில் மிக சிறந்த ஒழுங்கை நீங்கள் கடைப்பிடித்து உள்ளீர்கள்.

உலக நாடுகள் நம்மை பார்த்து வியந்து, நம்மை போல ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வீட்டில் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் எப்படி இதற்கு எதிராக போராட முடியும் என்று நினைக்கிறார்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் வீட்டில் இருக்கிறோம். நாம் கரோனாவிற்கு எதிராக ஒன்றாக போராடுகிறோம். கரோனா என்னும் இருளுக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்து செய்லபட போகிறோம். மிகவும் வெளிச்சமான எதிர்காலத்தை நோக்கி நாம் செல்ல போகிறோம். 

கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் அடித்தட்டு மக்களை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு மின்மிளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது. நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து கரோனவை வீழ்த்துவோம்.


மக்கள் கருத்து

Dass PandianApr 4, 2020 - 07:48:24 PM | Posted IP 173.2*****

Mr Modi, we appreciate your stay in the country continuously for the past two weeks. Please know the ground level status of your country people before proclaiming superficial beliefs. The daily wage labourer forms more than 60 percent of the total employment, are empty handed without a single pisa income for the past 2 weeks. Your 500 and CMs 1000 will not suffice given a the 21 day curfew days, and they are into starvation. Next the salaried class is nearing the poverty - many companies had halved the salaries and distributes half-half.

வாய்மைApr 4, 2020 - 03:13:22 PM | Posted IP 108.1*****

அவருக்கு என்னங்க தெரியும்?

hahaApr 3, 2020 - 11:32:19 AM | Posted IP 108.1*****

Light off for 9 minutes - Corona will run away Clap hands - Corona will run away No real action in the mind, just superficial dreams

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory