» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊரடங்கு உத்தரவு முடிந்து ஏப்.15-க்குப் பிறகு ரயில் பயணம்: ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்!!

வியாழன் 2, ஏப்ரல் 2020 11:13:38 AM (IST)

ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து ஏப்.15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனையடுத்து அத்தியாவசியப் பணி வாகனங்களைத் தவிா்த்து மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. 

இதையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory