» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்தது

புதன் 1, ஏப்ரல் 2020 1:16:00 PM (IST)

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்நோய்க்கு தினமும் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் லாக்டவுன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

132 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்., கடந்த 3 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory