» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் தினக்கூலிகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும்: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 7:33:09 PM (IST)

கரோனா வைரஸ் காரணமாக டெல்லி முடக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலிகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடியோ இணைப்பு மூலம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"இந்தச் சூழலை எதிர்கொள்ள அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும். கடந்த 40 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக புதிதாக யாரும் கண்டறியப்படவில்லை. 30 பேரில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகியுள்ளார். மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் பாதித்தோரின் எண்ணிக்கை கூடலாம்.

வளர்ந்த நாடுகளே கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளத் திணறுகின்றனர். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாளை முடக்கப்படவுள்ளது.  ஒருவருக்கொருவர் உதவுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துவருவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மையான தேசப்பற்று.ஊரடங்கு மற்றும் முடக்கம் காரணமாக டெல்லியில் யாரும் பசியால் உயிரிழக்கக் கூடாது. நகர் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. தங்குமிடங்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவு விநியோகத்துக்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்படும். யாரும் உணவில்லாமல் உறங்கக் கூடாது என்று நாம் உறுதி ஏற்போம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory