» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம்: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 10:00:00 AM (IST)

சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்திய ஒரு குழுவினர் உட்பட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள்  சார்பில் போராட்டம் நடைபெற்றது.   போராட்டத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குடியுரிமைச் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து  ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஒரு குழுவும் சேர்ந்து டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் பீகார் பவனில் இருந்து தமிழக மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்பொழுது தமிழில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கொண்டே பேரணியாக சென்றனர். சனக்யபுரியில் உள்ள தமிழ்நாடு மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது  போராட்டக்காரர்கள்  தடுப்புகள் கொண்டு தடுத்து வைத்திருந்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes
Thoothukudi Business Directory