» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை : முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

சனி 15, பிப்ரவரி 2020 3:32:59 PM (IST)

ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இந்நிலையில் விரைவில் அங்கு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வழிகளை வகுக்கத் துவங்கியுள்ளது. ஆந்திராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் அம்மாநில முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. 

அதில் மார்ச் 5 க்குள் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் வேட்பாளர் பணம் வழங்கியது, அவரது வெற்றிக்கு பிறகு தெரிந்தால் சம்பந்தப்பட்டவரின் பதவி பறிக்கப்படும் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MakkalFeb 16, 2020 - 01:47:20 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டிற்க்கும் கொண்டு வரவும்.அப்போதுதான் நாங்க திருந்துவோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesThoothukudi Business Directory