» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் மோடி அஞ்சலி

வெள்ளி 14, பிப்ரவரி 2020 4:06:16 PM (IST)

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் பிரமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில்,  புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த, துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கானவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory