» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இறைச்சி, வேர்க்கடலைக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபர் கைது: ரூ.45 லட்சம் பறிமுதல்!!

வியாழன் 13, பிப்ரவரி 2020 4:58:05 PM (IST)துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வேர்க்கடலை, பிஸ்கட், இறைச்சிக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடை, அவர் கொண்டு வந்த பை உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்தனர். ஆனால் எதிலும் சந்தேகத்திற்கிடமாக எந்த பொருட்களும் இல்லை. இதையடுத்து அவர் கொண்டு வந்த உணவு பையை திறந்து பார்த்தனர். அதில் வேர்க்கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சமைத்த இறைச்சி ஆகியவை இருந்தன. 

அதன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உணவுப் பொருட்களை சோதனை செய்தனர். அப்போது வேர்க்கடலையில் ஒன்றை உடைத்து பார்த்தபோது அதில் மடக்கி சுருட்டப்பட்டு கட்டப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் வேர்க்கடலைகளை அனைத்தையும் உடைத்தனர். அதில் வெளிநாட்டு பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அந்த வாலிபர் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளில் பிஸ்கட்டின் நடுவில் துளையிட்டு அதில் முன்னும், பின்னும் சில பிஸ்கட்டுகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இறைச்சியில் வெளிநாட்டு நாணயங்கள் மறைத்து கொண்டு வந்துள்ளார். 

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் முரத்அலி (25) என்பதும், துபாயில் இருந்து இந்த வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து சவுதி ரியால், குவைத்தினார், யூரோ, ஓமர் ரியால், கத்தார் ரியால் போன்ற வெளிநாட்டு பணம் ரூ.45 லட்சத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முரத் அலி கடந்த ஆண்டு பலமுறை துபாய் மற்றும் பல நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் வேர்க்கடலை, பிஸ்கட், இறைச்சியில் பணத்தை மறைத்து வைத்திருந்த வீடியோவை அதிகாரிகள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Related Tags :


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory