» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு: கபில் சிபில் வரவேற்பு

வியாழன் 13, பிப்ரவரி 2020 4:11:55 PM (IST)

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியான முடிவு என்று கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தையும் அரசியல் கட்சிகள் 48 மணிநேரத்துக்குள் இணையதளம், சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான  கபில் சிபில்  கூறியதாவது:- உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது. குற்றவாளிகள் அரசியலில் நுழைந்துள்ளனர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.  எனவே அரசியல் கட்சிகளை மக்கள் கேள்விகளை கேட்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory