» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் கேஜ்ரிவாலை எதிர்கொள்ள தெரியாததால் பாஜக தோல்வி : சிவசேனா விமர்சனம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 10:45:14 AM (IST)

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் கேஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி உள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது. 

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாரதீய ஜனதா தனது அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்களையும் பிரசாரத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர் கொண்டு அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றுவிட்டார்.

பாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம்- ஒழுங்கு மத்திய உள்துறை அமைச் சகத்தின் கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் பயனளித்து விட்டது. டெல்லியில் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும் டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டி உள்ளது.

ஆம் ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி போய் உள்ளது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுக்கு முதல்-அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி அமித்ஷாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Thalir Products


Anbu Communications

Thoothukudi Business Directory