» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

திங்கள் 20, ஜனவரி 2020 7:19:43 PM (IST)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கேரளா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று (திங்கள்கிழமை) பேசுகையில்,தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (என்பிஆர்) அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, அதைக் கவனமாகப் படிக்க வேண்டும் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களையும் வலியுறுத்துகிறேன். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.சிஏஏவுக்கு எதிராக நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இவ்வாறு  அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory