» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு : அமித்ஷா வாழ்த்து

திங்கள் 20, ஜனவரி 2020 3:21:40 PM (IST)

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா பதவி வகித்து வருகிறார். அக்கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா செயல்பட்டு வருகிறார். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவர் ஆனார். அவரது தலைமையில் கட்சி, நல்லதொரு வளர்ச்சியை பெற்றது. அவரது தலைமையில்தான் 2019 பாராளுமன்ற தேர்தலை கட்சி சந்தித்தது. அதில், முந்தைய 2014 தேர்தலைவிட கூடுதல் இடங்களை பிடித்து பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
 
அப்போது கட்சிக்கு தேர்தல்களில் தொடர் வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித் ஷா, பிரதமர் மோடியின் 2-வது அரசில் உள்துறை மந்திரி ஆனார். ஆனாலும், அவர் கட்சிப்பதவியில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியில் முந்தைய மோடி அரசில் சுகாதார துறை மந்திரி பதவி வகித்த ஜே.பி.நட்டா அமர்த்தப்பட்டார். அவர் பா.ஜ.க. செயல் தலைவராக 2019, ஜூன் 17-ம் தேதி பொறுப்பு ஏற்றார். பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா ஆகிய இருவராலும் விரும்பப்படுபவர், எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது ஜே.பி.நட்டாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்காக ஜே.பி.நட்டா சார்பில் மாநில கட்சி தலைவர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory