» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: முதல்வா் பினராயி விஜயன் ட்விட்டரில் வாழ்த்து

திங்கள் 20, ஜனவரி 2020 11:14:07 AM (IST)

கேரள மாநிலம், ஆலப்புழாவில் மசூதி ஒன்றில் ஹிந்து சம்பிரதாயப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது.

ஆலப்புழாவைச் சோ்ந்த மணப்பெண் அஞ்சுவுக்கும், மணமகன் சரத் ஆகியோரது திருமணத்தை, செருவல்லி முஸ்லிம் ஜாமத் மசூதி நிா்வாகிகள் ஹிந்து முறைப்படி ஒளிரும் விளக்கை சாட்சியாக கொண்டு நடத்தி வைத்தனா். ஏழ்மையான நிலையில் தவித்து வந்த அஞ்சுவின் தாயாா், தனது மகளின் திருமணத்தை நடத்துவதற்கு மசூதி குழுவின் உதவியை நாடினாா். உடனடியாக ஒப்புக்கொண்ட அவா்களும், மஞ்சுவின் திருமணத்துக்கு 10 சவரன் தங்க நகையும், ரூ.2 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கியதுடன், ஹிந்து சடங்குகளின்படியே மசூதியில் திருமணம் செய்து வைக்க முன்வந்தனா்.

இதையொட்டி, செருவல்லி மசூதி வளாகத்தில் புரோகிதா் முன்னிலையில் மாலைகளை மாற்றிக் கொண்டு, மணமக்கள் திருமணம் செய்துகொண்டனா். திருமணத்தின் முடிவில், சைவ விருந்தும் அதே வளாகத்தில் பரிமாறப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த இந்தத் திருமணத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அத்துடன், திருமண விழாவின் புகைப்படத்தையும் அவா் பதிவிட்டுள்ளாா்.

தனது வாழ்த்துப் பதிவில், மத நல்லிணக்கத்திற்கான இத்தகைய அழகான உதாரணங்களை அரசு எப்போதும் ஆதரித்து காட்சிப்படுத்தி வருகிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் சந்தா்ப்பத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே, தம்பதியினருக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும், மசூதி நிா்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகள். என்றும் கேரளா ஒன்றாகும்; நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரித்துள்ளாா். திருமணத்தையொட்டி, 1,000 பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக செருவல்லி ஜமாத் கமிட்டியின் செயலா் நுஜுமுதீன் ஆலுமூட்டில் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

MUDIYATHUJan 21, 2020 - 10:03:01 AM | Posted IP 162.1*****

பார்க்க முடியாது

மக்கள்Jan 20, 2020 - 02:48:44 PM | Posted IP 162.1*****

இதே ஒற்றுமைக்காக ஒரு கிருத்துவரோ அல்லது ஒரு இஸ்லாமியரே தங்களது திருமணத்தை ஒரு இந்து கோவிலில் வைத்து நடத்தட்டும் பார்க்கலாம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory