» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவுக்கு 3 தலைநகர்: பரிந்துரை நகலை எரித்து போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு!!

செவ்வாய் 14, ஜனவரி 2020 12:51:48 PM (IST)ஆந்திராவிற்கு 3 தலைநகர் தேவை என பரிந்துரைத்த ஜி.என்.ராவ் கமிட்டியின் பரிந்துரை நகலை எரித்து சந்திரபாபு நாயுடு இன்று போகி கொண்டாடினார்.

தமிழகத்தில் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தி, போகியை வரவேற்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு போகி கொண்டாடினார். 

அமராவதி பரிரக்சன சமிதி சார்பில் விஜயவாடாவில் போகி கொண்டாட்டத்துடன், தலைநகர் அமராவதிக்கு ஆதரவான போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.  அப்போது, ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் தேவை என்று முதன் முதலில் பரிந்துரை செய்த, ஜி.என்.ராவ் கமிட்டியின் பரிந்துரை நகலை அவர் எரித்து போகி கொண்டாடினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று, ஜி.என்.ராவ் கமிட்டி அறிக்கை நகலை எரித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory