» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது

சனி 14, டிசம்பர் 2019 7:21:36 PM (IST)

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் இன்று (சனிக்கிழமை) மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது,ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்துறைக்கான ஆலோசனைக் குழு, ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் விவகாரம் குறித்து மறுஆய்வு செய்தது. இதையடுத்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரது தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்கக்கோரி அந்தக் குழு பரிந்துரைத்தது என்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory