» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்: அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

சனி 14, டிசம்பர் 2019 3:38:57 PM (IST)

ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

பிரசாந்த் கிஷோர் இந்திய அளவில் பிரபலமான அரசியல் ஆலோசகர் ஆவார். இவர் சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ் என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார். அதில் தான் சுனிலும் அங்கம் வகித்தார். பிறகு இருவருக்கும் இடையே உருவான கருத்து வேறுபாட்டால், பிரசாந்த் கிஷோர் இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். நரேந்திரமோடி பிரதமர் ஆவதற்கும், நிதிஷ்குமார் பீகார் முதல்-அமைச்சர் ஆவதற்கும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்-அமைச்சர் ஆவதற்கும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய தேர்தல் ஆலோசனை பிரதான காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். டெல்லியில் ஆட்சியை தக்கவைப்பதில் பாரதீய ஜனதாவுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்பதால், ஆம் ஆத்மி கட்சி பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி உள்ளது.  2014 ஆம் ஆண்டு முதல் பல தேர்தல் வெற்றி வியூகங்களை சாதித்து காட்டியவர் பிரசாந்த் கிஷோர் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thalir Products




Thoothukudi Business Directory